திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் கல்வி மாவட்டம்
பவள விழாவினைக்கண்ட நமது பள்ளி, சிறந்த பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாடுகளுக்காக மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்ட அரசுப் பள்ளி
2023-2024
வாசிப்பை நேசிப்போம்
₹10 லட்சம் மதிப்பு உள்ளரங்கம்
150+ குழந்தைகளுக்கு
மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக பல்வேறு புதிய முயற்சிகளும் திட்டங்களும்

நான்கு ஆண்டுகளாக உறுப்பினர்கள் சீருடை அணிந்து தலைமை ஆசிரியர் பிரபாகர் தலைமையில் பல்வேறு விழாக்களையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். வருடத்தில் மூன்று நான்கு முறை பள்ளியில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
அரசு நூலகம் போல் பல்வேறு நூல்களை வழங்கி பராமரித்து வருகிறது. தினசரி செய்தித்தாள், கிட்ஸ் புன்னகை, தமிழக பெற்றோர் ஆசிரியர் செய்தி என பல தரப்பட்ட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி அருகில் தன்னார்வலர்கள் உதவியுடன் பத்து இலட்சம் மதிப்பில் உள்ளரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதனை நமது தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் 06.09.2022 அன்று திறந்து வைத்தார்கள்.

பெற்றோர்கள், ஊர்மக்கள் மற்றும் தன்னார்வலர்களை இணைத்து தீபாவளியன்று வெள்ளக்கோவில் வட்டாரத்தில் உள்ள பெற்றோரை இழந்த அல்லது ஒற்றை பெற்றோரை கொண்ட அரசுப் பள்ளி குழந்தைகள் சுமார் 150 பேருக்கும் மேலாக வருடா வருடம் புத்தாடை வழங்கி வருகிறது.
மாணவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்குவதற்கான நவீன வசதிகள்
மாணவர்களை சுழல் நாற்காலியில் அமர வைத்து அன்றைய பள்ளி நிகழ்வை தலைமையேற்கச் செய்து வருகிறது.
மாணவர்கள் அமர மேசையுடன் கூடிய வசதியான இருக்கைகள் பயன்படுத்தப்படுகிறது.
சேமிக்கும் தொகைக்கு வருட முடிவில் இரட்டிப்புத்தொகையாக அஞ்சலக பத்திரம் வழங்கப்படுகிறது.
15.07.2021 அன்றே முதல்வரின் எண்ணத்தினை செயல்படுத்திய பள்ளி. பெற்றோர்கள், தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளிக் கழிவறை தினமும் இரு முறை சுத்தம் செய்யப்படுகிறது.
பெரிய கண்ணாடி அலமாரி அமைக்கப்பட்டு மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படுகிறது.
மாணவர்கள் பல்வேறு துறை அலுவலர்களாக வேடம் அணிந்து நிழற்படம் எடுத்து பெரிய ப்ளக்ஸ் வைத்துள்ளது.
விடுமுறைகளில் பெற்றோருடன் விவசாய பணிகளை பார்வையிட அழைத்துச் சென்று வருகிறது.